Saturday, February 26, 2011

மனசாட்சியின் அழுகை...


விட்டுக்கொடுத்தல், வளைந்துகொடுத்தல், சகித்துக்கொள்ளுதல்...
இவைதான் வாழ்க்கையின் நெறிமுறையா??

உண்மையுடனும், உணர்வுடனும், ஒழுக்கமாய் வாழ நினைக்கிறேன்..
ஆம்...வாழ விரும்புகிறேன்.. நடிக்க அல்ல..

போட்டி போட்டு நடிக்கும் இம்மனிதர்களின் நடுவில் என்னையும் தொலைத்துவிட்டு தேடுகிறேன்...
மனிதன் தனி ஆள் தான். ஆனால் அவன் ஒரு சார்புப்பிராணி.. அதில் தவறேதும் இல்லை..
ஆனால் உணர்வுகளை புதைத்துவிட்டு வெறும் சடலமாய் கூடி வாழும் சார்புப்பிராணியாய் நான் வாழ விரும்பவில்லை..

மாறாக் கொள்ளையுடன் வாழ விரும்பும் என்னை, மாற்றங்கள் புதைக்கின்றன உயிருடன்..
மாற்றத்தை விரும்புபவள் தான் நான்.. ஆனால் மாற்றத்தை மட்டுமே அல்ல..தொடர் மாற்றங்கள் தொலைத்துவிடும் நிஜங்களை..
உணர்வாயா நீ என் உணர்வுகளை...??


6 comments:

  1. no words to appreciate this,wonderfull lines :)
    happy for u :)

    ReplyDelete
  2. உண்மையுடனும், உணர்வுடனும், ஒழுக்கமாய் வாழ நினைக்கிறேன்..
    ஆம்...வாழ விரும்புகிறேன்.. நடிக்க அல்ல..

    மிக நன்று.... வாழ்த்துக்கள்
    ---------- நட்புடன் ..சிவநிதியன்

    ReplyDelete